Friday, May 13, 2005

பல்லவியும் சரணமும் - பதிவு 24 - விடைகள்

நண்பர்களே,
அடுத்து வரப்போகும் "பல்லவியும் சரணமும் - 25" வெள்ளி விழா பதிவு! இதற்காக 20 நல்ல பழைய பாடல்களை சேகரித்து வருகிறேன்! 25 வாரங்கள் (நடுவில் ஓரிரு வாரங்கள் விட்டுப் போயிருக்கலாம்!) இப்போட்டியை தொடர்ந்து நடத்த வேண்டி, நல்ல பாடல்களைத் தேடி எடுப்பதில் என் காவு தீர்ந்து விட்டது :))

அதனால், 25-வதுடன், பல்லவியும் சரணமும் விளையாட்டை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்திருக்கிறேன். இது வரை வந்த மொத்த 'பல்லவியும் சரணமும்' பதிவுகளில் கேட்கப்பட்ட சரணங்களில், உங்களால் விடை கூற முடியாதாவை என்று பார்த்தால், பத்து அல்லது பதினொன்று மட்டுமே தேறும் :))

உங்களது பேரார்வமும், பழைய பாடல்களின் மீதான விருப்பமும் தான், என்னை இப்போட்டியை தொடர்ந்து நடத்த வைத்தது. "பல்லவியும் சரணமும்" பதிவுகளில் பின்னூட்டமிட்ட அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி !!!!!



1. சிறுக சிறுக உயிரை பருகிச் சென்றாளே ...

பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்!

2. நித்தம் இதழ் தேடும் நேரம் நாணம் எனும் நோய் ...

செங்கமலம் சிரிக்குது, சங்கமத்தை நினைக்குது

3. உன் புகழ் வையமும் சொல்ல ...

என்ன விலை அழகே ? சொல்ல விலைக்கு வாங்க வருவேன்!

4. மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம்...

ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது

5. கலை நிலா மேனியிலே சுளைப்பலா சுவையை ...

ஒரு பொன்மானை நான் காண தகதிமிதோம், ஒரு அம்மானை

6. மானே உன் வார்த்தை ரீங்காரம் மலரே என் நெஞ்சில் நின்றாடும் ...

கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று

7. இன்பதுன்பம் எதிலும் கேள்வி தான் ...

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் ?

8. மல்லிகை பஞ்சணை இட்டு மெல்லிய சிற்றிடை தொட்டு ...

கண்ணா வருவாயா, மீரா கேட்கிறாள், மாலை மலர்ச்சோலை

9. கொடி தான் தவழுது தவழுது பூப்போல் ...

மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத் தானே!

10. யாரும் அறியா பொழுதினிலே அடைக்காலம் ஆனேன் ...

ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன், அருள்மொழி கூறும்

11. பித்து பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்கு...

குங்குமப்பூவே, குஞ்சு புறாவே, தங்கமே உன்னை கண்டதும் நெஞ்சம்

12. காலை மலருக்கு பகையாக ஆனேன்...

துயிலாத பெண்ணொன்று கண்டேன், நானா, ஆமாம், எந்நாளும் ....


என்றென்றும் அன்புடன்
பாலா

0 மறுமொழிகள்:

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails